Myv3Ads – வாழ்கை வழி பயணம்
Myv3Ads என்ற நிறுவனம், ஏராளமான மக்களை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தங்களை இணைக்க வைத்தது. ஆனால், அதையும் தாண்டி, Myv3Ads இணைந்த நண்பர்கள் பலர், புதிய உண்மைகள் மற்றும் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொண்டனர்.
சட்டம் – அடிப்படை அறிவு Myv3Ads யின் பயணத்தில், The K TV யின் கார்த்திக் பிள்ளை YouTube சேனலின் மூலம், சட்டம் தொடர்பான சில அடிப்படைகளை தெரிந்து கொண்டோம். சட்டத்தின் அடிப்படைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வது வாழ்க்கையில் முக்கியம் என்பதை உணர்த்தியது.
Referral Marketing – சரியா? தவரா? Referral marketing என்ற துறையில் நம்மால் அறியாமல் பல்வேறு குழப்பங்கள் உருவாகலாம். Myv3Ads இல் இணைவதன் மூலம்,Referral marketing எப்படி செயல்பட வேண்டும், அது சரியாக உள்ளதா அல்லது தவறான முறையில் செயல்படுகிறதா என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம்.
அரசியல் வாதிகள் மற்றும் அவர்களின் பாதிப்பு - அரசியல் அமைப்புகள் மற்றும் அவற்றின் பின்னணியில் நடைபெறும் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் நம் வாழ்க்கையில் என்ன வகையில் பாதிக்கிறது, மற்றும் கார்ப்பரேட் உலகத்திலும் எப்படி அதற்கான விளைவுகள் இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.
கார்ப்பரேட் சதி – நிதி உலகின் இருள் Myv3Ads மூலம் நாங்கள் கற்றுகொண்ட முக்கியமான பாடம், கார்ப்பரேட் சதிகள் பற்றி. பெரிய நிறுவனங்கள் எவ்வாறு சதிகள் தீட்டி தங்கள் ஆதிக்கத்தை நிறுவுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டோம்.
Court Case Status – சட்டத்தைப் புரிந்து கொள்வது Myv3Ads இணைவதன் மூலம், சட்ட வழக்குகள் பற்றிய விவரங்களை, குறிப்பாக, Court case status ஐ எவ்வாறு ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம் என்பதற்கான அறிவையும் பெற்றுக்கொண்டோம்.
வாழ்க்கை பாடம் – பணத்தின் ஆதிக்கம் Myv3Ads இல் நாம் எதிர்பார்த்ததைப்போல் பணம் வந்திருக்கவில்லை, ஆனால் வாழ்க்கையில் சில முக்கியமான பாடங்களை கற்றுகொண்டோம். பணம் இல்லாமலிருந்தாலும், நமது உறவுகள், நட்புகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றன என்பதையும் புரிந்துகொண்டோம்.
நம்பிக்கை – Myv3Ads வாயிலாக உணர்ந்தது பணம் வராத சூழலில், payout இல்லை என்ற நிலையில், நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் – நம்பிக்கை என்னவென்று உணர்வது. Myv3Ads உடன் தங்கள் நம்பிக்கையை வைத்திருந்தவர்கள், எவ்வாறு நம்பிக்கை என்ற ஒன்று நம் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் அறிந்துகொண்டனர்.
முடிவு:
Myv3Ads நமக்கு ஒரு சாதாரண வருமான வாய்ப்பாக இருந்தாலும், அது நம் வாழ்க்கையில் பல துறைகளில் தெளிவு மற்றும் அறிவை வழங்கியது. சட்டம், அரசியல், சந்தை மற்றும் உறவுகள் என பல வகைகளில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், நம் எதிர்காலத்தை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.
Myv3Ads, நம்பி
க்கையுடன் செயல்பட உதவியதற்காக நன்றி!
0 கருத்துகள்