மூன்று மாதங்களுக்கு பிறகு Myv3ads MD திரு சக்தி ஆனந்த சார் விடியோவில் பேசி உள்ளார் மேலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்
அன்பார்ந்த Myv3 குடும்ப உறவுகளுக்கு வணக்கம்!
நண்பர்களே,
நான் பலமுறை வீடியோ பேசும்போது குடும்ப உறவுகளே, நண்பர்களே என்று சொல்லும்போது பொது வழியில் என்னெல்லாம் கேட்டார்கள் என்றால், “நீங்க ஒரு பிசினஸ் பண்றீங்க, ஒரு ஓனர், ஒரு மெம்பர், அவ்வளவுதான் ரிலேஷன்ஷிப், இதுக்குள்ள எங்க குடும்பம் வந்துச்சு, நட்பு வந்தது?” எனக் கேட்டார்கள்.
ஆனா, இந்த ஒரு கொடுமையான காலகட்டத்தில், மூன்று மாதங்கள் நான் சிறையில் இருக்கும்போது, தன்னோடு குடும்பத்தார் சிறைக்கு போனால், எந்த அளவுக்கு வேதனைப்படுவார்கள், அதுக்கான எந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பார்கள், அது எந்த அளவுக்கு வந்து போராட்டம் பண்புவார்கள் என்பதையும் அவர்கள் எண்ணி இருக்கிறார்கள்.
இன்னைக்கு எல்லா உறுப்பினர்களும், மேக்ஸிமம், எனக்காக வேண்டுதல் பண்ணி இருக்கீங்க. நான் சிறையில் இருக்கும்போது நம்முடைய லாயர்ஸ் டீம் மூலமாக எனக்கு தகவல் வரும். இந்த மாதிரி பாதயாத்திரை போறாங்க, பால்காவடி எடுக்குறாங்க, கோயில் அன்னதானம் போடுறாங்க, சர்ச்ல வந்து பிரார்த்தனை வச்சிருக்காங்க, மசூதியில வந்து இந்த மாதிரி பிரார்த்தனை போக சொல்லிட்டு பல்வேறு விதமான செய்திகளை எனக்கு அப்பப்ப சொல்லும்போது, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையா அந்த மூன்று மாதத்தை கடக்குறதுக்கு, மிகப்பெரிய சப்போர்ட்டா அந்த செய்திகள் இருந்துச்சு.
சோ, அந்த அளவுக்கு இன்னைக்கு நிறுவனத்தின் மேல நம்பிக்கை வச்சு, என் மேல அன்பு வச்சு, இன்னைக்கு என்னுடைய விடுதலைக்காக முழு நம்பிக்கையோட, ஒரு மிகப்பெரிய பொறுமையோட, ஒரு மிகப்பெரிய ஆர்வத்தோட ஒரு ஒத்துழைப்பு கொடுத்து, இன்னைக்கு எல்லா விதத்திலும் நின்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் இந்த நேரத்துல என் கோடான கோடி நன்றிகளை உங்கள் பாதத்தை தெரிவிச்சுக்கிறேன்.
![]() |
ஆக்சுவலா, 91 இரவுகளில் நான் சிறையில் இருக்கும்போது கூட பேச முடியல, அதோட லாஜிக் இருக்கு. ஆனா, வெளிய வந்து மூணு நாள் நான் உங்களோட பேசல. இதுல என்ன லாஜிக் இருக்கு? இந்த மூன்று நாள் வெளிய வந்ததுக்கு அப்புறம் பேச முடியாம இருந்த சூழல் வந்து, மிகப்பெரிய வேதனையை எனக்கு கொடுத்தது. எப்படி நீங்க எதிர்பார்த்து இருந்தீங்களோ, அதைவிட பெரிய ஆர்வமா உங்களோட பேசணும் எனக்கு இருந்தது.
பட் இன்னிக்கு நமக்கு ஹானரபிள் ஹைகோர்ட் பல்வேறு முதல் கொடுத்துதான் என்னை விடுதலை பண்ணிருக்காங்க. அதுல மிக முக்கியமான விஷயம், நான் அனாவசியமா எதையும் வெளிய பேசக்கூடாது. அப்படிங்கற விஷயமும், அதுல வந்து ஒரு இம்பார்ட்டன்ட் கண்டிஷனா இருக்குது. குறைந்தபட்சம் ஒரு நன்றியாவது உங்களுக்கே சொல்லிட்டு, அடுத்தடுத்த விஷயங்களை ஒரு கேப் எடுத்து, ரிலாக்சேஷன் வாங்கிட்டு, உங்களோட பேசலாங்கிறதுக்காக தான் இந்த வீடியோல உங்களோட பேசுறேன்.
சோ, மீண்டும் ஒருமுறை, இந்த கொடுமையான காலகட்டத்துல, நம்பிக்கையோடு, பொறுமையோடு, இன்னைக்கு நிறுவனத்துக்காக குரல் கொடுத்த நிறுவனத்தை நல்லா இருக்கும்னு நினைச்சு, பிரார்த்தனை பண்ணேன். நான் வெளிய வருவேன்னு சொல்லிட்டு, உங்களுடைய எண்ணங்கள் பிரதிபலிச்சு, பல்வேறு விதமான கோயிலில் சென்று எனக்காக வேண்டிக்கொண்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும், உங்கள் பொற்பாதம் தொட்டு மீண்டும் நன்றி சொல்றேன்.
கடைசியா சொல்றது என்னன்னா, என்னவா இருந்தாலும், நான் ஒரு லட்சியத்துக்காக ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணேன். நான் என்ன நினைச்சுட்டு போறேனோ, அந்த இலக்கை அடையும் வரைக்கும் நான் ஓய மாட்டேன். எத்தனை தடைகள் வந்தாலும், என்னுடைய வேகத்தை வேணா ஸ்லோ பண்ணலாம், காலத்தை வேணா அதிகப்படுத்தலாம், ஆனா இலக்கை அடையும் அந்த முயற்சியை யாராலும் தடுக்க முடியாது. நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.
நன்றி. வணக்கம்.
0 கருத்துகள்