MD திரு சக்தி ஆனந்தன்: நன்றி, நிபந்தனைகள் மற்றும் எதிரிகளின் கண்கொத்திப் பார்வை
அதற்குப் பிறகு, Myv3ads நிறுவனத்தின் சார்பில் App தொடர்பாக, Hub மற்றும் Office ஓப்பன் செய்வது போன்ற தகவல்கள் எதுவும் கிடைக்காததால், நம் மக்கள் மனதில் குழப்பம் நிலவுகிறது. அவர்கள் ஒரு பக்கம் தவித்து கொண்டிருக்கின்றனர்.
MD சார் மீது எதிரிகளின் கண்கொத்திப் பார்வை
மற்றொரு பக்கம், MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் ஏதாவது ஒரு வழியில் சிக்குவார் என்று எதிரிகள் கண்கொத்திப் பாம்புகள் போல காத்திருக்கிறார்கள். காரணம், MD சார் தற்போது நிபந்தனைகள் கொண்ட பிணையில் தான் வெளியே வந்துள்ளார். எதாவது ஒரு நிபந்தனையை மீறி செயல் படுத்துவாரா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள், ஏனெனில் அப்படி நடந்தால் அவரது பிணை ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நெருக்கடியில் MD அவர்களின் நிலை
இந்த சூழ்நிலையில், MD சார் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறார். அவர் நிறுவனம் மற்றும் மக்களின் நலனுக்காக வெளிப்படையாகப் பேச முடியாத நிலையில் உள்ளார். பேசினால், எதிரிகள் அவரது பிணையை ரத்து செய்வதற்கான வாய்ப்பை பெறலாம். இதனால், App செயல்படாமல் மேலும் நாட்கள் தள்ளிப் போக, மக்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். அப்போது மக்கள் பொறுமையை இழந்து தாமாகவே புகார் அளிப்பார்கள் என்று எதிரிகளின் கூட்டம் காத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்கள்
இந்த நிலையில், பலர் பல்வேறு கருத்துகளை சமூக ஊடகங்களில், குறிப்பாக YouTube சேனல்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் சிலர் Myv3ads App இன்று திறக்கப்படும் என்றும், புதிய App வருவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்றும் கூறுகிறார்கள். சிலர் பழைய App இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் அவர்கள் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.
எங்கள் நிலை
எங்கள் கருத்து என்னவென்றால், பழைய App மீண்டும் இயங்க வேண்டுமானால் இத்தனை நாட்கள் தேவை இல்லை. புதிய App வருவதற்காகவே இத்தனை நாட்கள் ஆகிறது என்பதே நிஜம். MD சார் தனது கண்டிஷன் பைலிலிருந்து சிறிது விடுதலை கிடைக்கும் வரை அவர் நேரடியாக வீடியோவில் பேசுவதை சந்தேகமாகவே பார்க்கிறோம். இதை அவர் தனது கடைசி வீடியோவில் கூறியிருக்கிறார்.
MD அவர்கள், "இன்னிக்கு நமக்கு ஹானரபிள் ஹைகோர்ட் பல்வேறு நிபந்தனைகளுடன் என்னை விடுதலை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான விஷயம், நான் அவசியமின்றி எதையும் வெளியே பேசக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு நன்றியாவது சொல்லி, அடுத்தடுத்த விஷயங்களை கேப் எடுத்து, ரிலாக்சேஷன் வாங்கிக் கொண்டு பேசுவேன்" என்று குறிப்பிட்டார்.
முடிவு
அதனால், தேவையற்ற கவலையும் அச்சமும் வேண்டாம். நமது MD மற்றும் நாங்கள் அனைவரும் இந்த நெருக்கடியை தாண்டி வெற்றியை அடைவோம். மிக முக்கியமாக, பொறுமை இச்சமயத்தில் மிகவும் அவசியம்.
நன்றி.!
0 கருத்துகள்