Ad Code

மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

My V3 Ads குடும்ப உறவுகளுக்கு வணக்கம்,


பாதை முடிந்த பின்னும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே 
இந்தத் தலைப்பு நமது My V3 Ads க்கு மிகச் சரியாக பொருந்தும். எமது நிறுவனத்தை முடிக்க வழக்குப்போட்டு, பாதையை முடித்து விடலாம் என்று நினைத்தவர்கள் இருந்தார்கள். ஆனால், நமது MD அவர்கள், துணிச்சலாக முன்னோக்கி சென்று யாரும் செய்யாத ஒரு தனிச்செயலைச் செய்தார்.


இந்தச் செயலின் மூலம் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அவர் ஒரு புதிய விதத்தை உருவாக்கினார், இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் தன்னுடைய நேர்மையை நிரூபிக்க, “என்னிடம் எந்தத் தவறும் இல்லை, எவ்ளோ விசாரித்தாலும் சரி” என்கின்ற நம்பிக்கையுடன் நேரில் சென்று சரண்டர் ஆனார்.


நமது MD கூறியது போல, "மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்" – நம்மிடம் தவறு இல்லாததால் நாம் பயப்பட வேண்டியதில்லை. நமது பாதையில் தடைகள் வந்தாலும், அதை உடைத்து நமது இலக்கை அடைவோம் என்று MD உறுதியுடன் கூறியுள்ளார்.


இப்போது நமது தடைகள் குறைந்து, மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், நமது வழக்கு கோவை EOW விலிருந்து சென்னை EOW விற்க்கு மாற்றம் செய்யப்பட்டதுடன், MD அவர்கள் நேரில் சென்று சரணடைந்தனர். மீண்டும் கோவை EOW விற்க்கு வழக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும்.

இந்த மாற்றம் நடந்தால், வழக்கின் சரிசம அளவீடு செய்யும் ஆவணங்கள் இலகுவாக முடிவுக்கு வரும், மேலும் நமது MD அவர்கள் மீண்டும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்.


எதிர்காலத்தில் நன்மை மட்டுமே நம்மை நோக்கி வரும். MD அவர்கள் ஜாமீனில் வெளிவந்த உடன், அவர் மாயம் ஆகிவிடுவார் என்று சிலர் கூறினார்கள். ஆனால், அவர்கள் சொன்னது வெறும் கற்பனையாக மாறிவிடும். தடை இருந்தாலும், நமக்கு தெளிவான ஒரு வீடியோ மூலம் அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.


நமது நிறுவனம், சிறப்பாக இயங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் எல்லாவற்றையும் உடனடியாக காண முடியாமல் இருந்தாலும், நல்லது மட்டுமே நடக்குமென நம்பிக்கை வையுங்கள்.

தீபாவளி நேரத்தில் நமக்கு நல்ல செய்தி வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். பலர் அதனை பணம் பற்றியதாக காத்திருக்கலாம், ஆனால் எங்களுக்கு மிக முக்கியமானது – நிறுவனம் மீண்டும் தொடங்குவதாக வந்தால், அதுவே நமக்கு பெரிய சுபச்செய்தி!


அனைவருக்கும் இதயம் கனிந்

த வாழ்த்துக்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்