Myv3ads புதிய உறுப்பினர்களுக்கு தெரியாத ஒரு உண்மையான செய்தி:
மூன்று நாள் ஆகியும் ஏன் இன்னும் Myv3ads App இயல்பு நிலைக்கு வரவில்லை என்று Myv3ads உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த கொழப்பமாகவும். வருத்தமாகவும். இருக்கிறீர்கள் என்பதை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது, ஏன் என்றால் Myv3ads உறுப்பினர்கள் எதிற்பார்கும் எந்த ஒரு விஷயமும் நிறுவனத்திற்கு சாதகமாக நடக்கவில்லை என்பது தான் உண்மை.! மக்கள் பல முறை ஏமாற்றத்தை சந்தித்து உள்ளார்கள், உதாரினமாக தேர்தல் சமயத்தில்.
- KYC Documents Update செய்தால் தான் நம் நிறுவனம் தடையின்றி செயல்படும் என்று கூறினார்கள்.
- பிறகு தேர்தல் சமயத்தில் பணம் பரிவர்த்தனை செய்தால் அது Myv3ads நிறுவனத்துக்கு தான் ஆபத்து அதனால் தேர்தல் பணிகள் முடியட்டும் என்று கூறினார்கள்.
- பிறகு Myv3ads நிறுவனம் மேல் ஒரு உண்மைக்கு புறம்பான புகார் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் MD திரு சக்தி ஆனந்தன் சார் மற்றும் அனைத்து Directorகளும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதை கூறி Payout போட முடியவில்லை என்று கூறினார்கள்.
- பிறகு Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் Myv3ads நிறுவனத்தில் இன்னும் பல்வேறு திட்டங்கள் காத்துக்கொண்டு இருக்கிறது ஆனால் இந்த பொய் வழக்கும் அந்த வழக்கு விசாரணை காரணமாக நான் எதையும் செய்ய முடியாமல் இப்படி ஒளிந்து இருக்கிறேன் என்று கூறினார் மேலும் இப்படியே நம்மால் இருக்க முடியாது என்று ஒரு முடிவு செய்தார்.
- என்ன முடிவு என்று நாம் அனைவரும் அறிந்ததே. MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் நேரடியாக கலத்தில் இறங்கி இந்த வழக்கு சம்மந்தமாக எந்த விசாரணையாக இருந்தாலும் என்னை விசாரித்து கொள்ளுங்கள் என்று MD சரண்டர் ஆனார். இந்த சமயத்தில் அதிகபட்சம் இரண்டு மாதங்கள் 60 நாட்கள் முடிந்தால் பெயில் கிடைக்கும் என்று கூறினார்கள்.
- பிறகு விசாரணை நடக்கும் சமயங்களில் Myv3ads office அனைத்துக்கும் விடுமுறை விடுங்கள் இல்லை என்றால் அதையும் கோர்ட் பறிமுதல் செய்யப்படும் என்று The K TV கார்த்திக் பிள்ளை சொல்லியதும் கூறினார்கள்.
- அடுத்து 60 நாள் முடிவுக்கு வரும் சமயத்தில் ( Statutory ) இந்த பெயிலில் வெளியே வந்தாள் சில கட்டுப்பாடு இருக்கும் அதனால் Merit பெயில் முயற்சி செய்கிறார்கள் என்று கூறினார்கள்.
- இப்போது Merit பெயில் கிடைக்கவில்லை அதற்கும் காரணம் சொல்லி இருக்காங்க.
இப்படி எதுவுமே Myv3ads உறுப்பினர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த நிலைமையில் இருக்கும் Myv3ads உறுப்பினர்களுக்கு ஒரே நம்பிக்கை App நார்மலா வேலை செய்து வருகிறது என்ற ஒன்றுமட்டுமே நம்பிக்கை தரும் வகையாக இருந்தது.!
இப்போது இந்த நிலைமையில் இருக்கும் போது தொடர்ந்து மூன்று நாட்களாக Myv3ads App வேலை செய்யவில்லை என்பதால் உறுப்பினர்கள் தொடர்து கொழப்பமாகவும் வருத்தமாகவும் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது.!
புதிய உறுப்பினர் அறியாத விசயம்:
மேலும் புதிய நபர்களுக்கு தெரியாத ஒரு உண்மையான தகவல் இருக்கிறது. அது என்னவென்றால் இப்போது தொடர்ந்து மூன்று நாளாக நமது App செயல்படாமல் இருப்பது போல Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் வெளியே இருந்த போதும் ஒரு வாரம் காலம் வரை App செயல்படாமல் இருந்து இருக்கிறது. இது பழைய உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும் அதனால் யாரும் கவலை பட தேவை இல்லை கூடிய விரைவில் App இயல்பு நிலைக்கு வரும்.
மகிழ்ச்சியான செய்தி:
அதோடு நமது MD திரு சக்தி ஆனந்தன் சார் இப்போது பெயிலில் வெளியே வந்துவிட்டார் நிச்சயம் அதனால் கூடிய விரைவில் App இயல்பு நிலைக்கு வரும் காத்திருங்கள்.!
நல்லவர் லட்சியம்...! வெல்வது நிச்சயம்...!
0 கருத்துகள்